செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் .
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள பழமை வாய்ந்த திருத்தலமாக விளங்கும் செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு தினமும் வணங்கும் தெய்வமாக வரலாறு படைத்த அருள்மிகு சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிம்ம வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், சுவாமி வீதியுலா நடைபெற்றன.
5-ஆம் நாள் திருவிழாவில் சுவாமி ரங்கநாதர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய திருவிழா 7ஆம் நாள் திருவிழாக இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலையில் மூலவர் தாயார் ரங்கநாயகி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து .
உற்சவர் ஸ்ரீதேவிபூதேவி சமேத ரங்கநாதருக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்த காலை 7.00 மணிக்கு ரத பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் தேரில் எழுந்தருளினார்.
மங்கல இசை முழங்க மேளதாளங்களுடன் மற்றும் பாகவதர்களின் இசையில் பக்தி பாடலுடன் சிங்காரம் கிராமத்தின் மாட வீதியில் ஊர்வலமாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதில் செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு பணியில் செஞ்சி காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறையினர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்


