in

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கை


Watch – YouTube Click

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கை

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெண்ணாறு பாசனத்திற்கு உட்பட்ட வெட்டாறு. ஓடம்போக்கியாறு, கடுவையாறு. அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு, முல்லியாறு, வெள்ளையாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனம் பெறும் சம்பா / தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள 138 கிராமங்களில் உள்ள 96480.45 மொத்த ஏக்கர் பரப்பளவில், 17390 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீரின் தேவையைப் பொருத்து மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 3ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீரை பிப்ரவரி 9ம் தேதி முதல் முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சரியான முறையில் விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் கடைமடை பகுதிகளான கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வடக்குவெளி, பூலாங்குடி, ஆகிய கிராமங்களிலும் திருக்குவளை. ஏர்வைக்காடு வெள்ளையாறு இயக்கு அணை, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி, ஓடச்சேரி, நத்தப்பள்ளம், வடுவூர் ஆகிய பகுதிகளில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட பாசனப்பரப்புக்கு தேவைப்படும் தண்ணீர வந்தடைந்ததை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான தண்ணீர விவசாய பகுதிகளுக்கு உரிய முறையில் சென்றடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கமலக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) தேவேந்திரன், பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் கீதா , கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெய்வேந்திரன், வேளாண்மை அலுவலர் பெரம்பலூர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர், கீழ்வேளூர் ராஜலெட்சுமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

தர்ஷினியை காப்பாற்றும் தோழர்… திசை திரும்பும் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில்