in

யோகிராம் சுரத்குமார் குருஷேத்திரத்தில் சிறப்பு பூஜைகள்

யோகிராம் சுரத்குமார் குருஷேத்திரத்தில் சிறப்பு பூஜைகள்

 

மதுரை ஜெய்ஹிந்த்புரம்: ராமையா தெரு யோகிராம் சுரத்குமாரின் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை- பால் இளநீர் பன்னீர் உள்ளிட்டவர்களை கொண்டு அபிஷேகம் செய்த பக்தர்கள் – சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட யோகிராம் சரத்குமாரை மலர்கள் தூவி பூஜை செய்து வணங்கிச் சென்ற பக்தர்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருக்கக்கூடிய இராமையா தெரு பகுதியில் அமைந்துள்ள யோகிராம் சுரத்குமார் குருஷேத்திரத்தில் வியாழக்கிழமை யான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் யோகிராம் சுரத்குமாரின் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இந்த வாரம் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மூலவருக்கு பால் பழம் தயிர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு விசேஷ பூஜைகள் நடைபெற்ற நிலையில் வண்ணமலர்கள் மற்றும் புத்தாடை அணிவிக்கப்பட்டு யோகிராம் சுரத்குமாரை பக்தர்கள் மனம் உருக வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பக்தர்கள் பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பால் பழம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து உற்சவருக்கும் சிறப்பு பூஜையும் ஆராதனையும் நடைபெற்றது.

குறிப்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் விசேஷ பூஜைகள் மற்றும் பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வரக்கூடிய இந்த குருசேத்திரத்தில் வியாழக்கிழமையான இன்று நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பக்தர்களே பூஜை செய்து வழிபாடு செய்யக்கூடிய இந்த குருசேத்திரத்தில் அமையப்பட்டுள்ள இந்த மூலவர் ராஜஸ்தானில் தயார் செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய அவருடைய ஆசிரமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிறகு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு மகனாக இருக்கக்கூடிய இவர் கையில் எப்போதுமே பனை ஓலை விசிறி வைத்திருந்ததால் அவரை மக்கள் விசிறி சாமியார் என்றும் அன்போடு அழைத்தனர்.

அடிப்படையில் பீகார் மாநிலத்தில் பிறந்தவராக இருந்தாலும் தன்னுடைய இளமை காலத்தில் ஆன்மிக தேடலால் ஈர்க்கப்பட்டு தென் இந்தியாவிற்கு வந்த இவர் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரமண மகரிஷி .சுவாமி ராமதாஸ் ஆகியோரை தனது குருக்களாக கருதினார்.

தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று கூறிக் கொண்ட அவர் ராம ராம என்று உச்சரிப்பதன் மூலமே பக்தர்களின் இன்னல்களை தீர்த்து வைத்தார்.

இவர் முக்தி அடைந்தபின் திருவண்ணாமலையில் இவரது நினைவாக ஒரு பெரிய ஆசிரம அமைக்கப்பட்டு அங்கு தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில்.

மதுரையில் இருக்கக்கூடிய இந்த குருசேத்திரத்தில் வியாழக்கிழமை அன்று அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

ஆழ்வாா்திருநகாி நாச்சியாா் கோயில் (ஸ்ரீஆண்டாள் சந்நிதி) மகா ஸம்ரோஷணம்