ஆய்வின்போது கட்சியினர் விடுதிக்குள்ளோ, பள்ளிகளுக்கோ வரக்கூடாது அமைச்சர் சம்பத்குமார் பேட்டி
ஆய்வின்போது கட்சியினர் விடுதிக்குள்ளோ, பள்ளிகளுக்கோ வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம், எங்களுடன் வரும் கட்சி நிர்வாகிகள் வீடியோ எடுப்பதை ரீல்ஸ் என கூறமுடியாது – அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பவந்து வீடியோ எடுத்து வெளிப்படுத்துகின்றனர்- அமைச்சர் சம்பத்குமார் பேட்டி.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி சம்பத்குமார், மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கல்லூரி மாணவியர் சமூகநீதி விடுதியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது விடுதியில் உள்ள சமையலறை, உணவருந்தும் அறை மற்றும் பொருள் இருப்பு அறைகளை பார்வையிட்ட அமைச்சர், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவு வழங்கப்படும் நேரம் மற்றும் விடுதியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட உணவை நேரடியாக சுவைத்து அதன் தரத்தையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, விடுதியில் பழுதடைந்திருந்த மின் வயர்களை உடனடியாக சீரமைக்கவும், சேதமடைந்த கொசு வலைகளை மாற்றி மாணவியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக சமூகநல விடுதிகளில் ஆய்வு நடத்திவருகிறோம்; மாணவர்களிடம் நேரடியாக சென்று நிறை குறைகளை கேட்டு அதனை நிறைவேற்றும. பணிகளை மேற்கொள்கிறோம்.
பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றால் வெளியே தவெகவினர் பேனர் வைக்க வேண்டாம் என நாங்கள் சொல்லிக்கொண்டுள்ளோம்.
ஆய்வின்போது கட்சியினர் விடுதிக்குள்ளோ, பள்ளிகளுக்கோ வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம், எங்களுடன் வரும் கட்சி நிர்வாகிகள் வீடியோ எடுப்பதை ரீல்ஸ் என கூறமுடியாது – அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பவந்து வீடியோ எடுத்து வெளிப்படுத்துகின்றனர்;
DNT ஒற்றை சான்றிதழ் என்பது கொள்கை முடிவு அதனை முதலமைச்சர் முடிவு செய்வார், DNT ஒற்றை சான்றிதழ்கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்துவோம், மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை முதலமைச்சரிடம் எடுத்துரைப்போம்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரப்படுமா என்ற கேள்விக்கு, துறை தொடர்பாக ஆய்வறிக்கை செய்து கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விடுதிகளில் ஆய்வு செய்தபோது உணவு தரம் குறைபாடு இருந்தது சமூக நீதி விடுதிகளில் Centralized KITCHEN மூலமாக சமைத்து உணவு வழங்கும் திட்டத்தை மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் Gentralzied Kitchenக்கு மாற்றாக அந்தந்த விடுதிகளில் சமைத்து வழங்கும் நடைமுறை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
திருமாவளவனின் கருத்து குறித்த கேள்விக்கு ? துறை வாரியான கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பதாகும் அரசியல் ரீதியான கேள்விகள் வேண்டாம் என தெரிவித்து புறப்பட்ட சென்றார்.


