கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவங்கியது கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார் .
பேரணிக்கு முன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கி மன்னம்பந்தல் கல்லூரி வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
இப்பேரணியில் சுமார் 500க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துவங்கி தரங்கம்பாடி சாலை வழியாக ஏவிசி பொறியியல் கல்லூரியில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.


