மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
மயிலாடுதுறையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல். 23 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. ஆறு பேருக்கு கை கால்கள் எலும்பு முறிவு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை.
மயிலாடுதுறையில் மதுரையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்தும் மயிலாடுதுறையில் செம்மங்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இரண்டு பேருந்துகளிலும் இந்த விபத்தில் இரண்டு ஓட்டுனர்களையும் தீயணைப்பு துறையினர் வந்து போராடி மீட்டனர்.
பயணித்த 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. எஸ் இ டி சி அரசு பேருந்து ஓட்டுநர் விவேக், கனி ராஜா, டி என் எஸ் டி சி டிரைவர் சரத்குமார் கண்டக்டர் நாகராஜ் மற்றும் 2 பயணிகள் ஆகிய ஆறு பேர் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
23 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


