in

அரிவளூர் ஸ்ரீ பொன்னம்மாள் காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது 

அரிவளூர் ஸ்ரீ பொன்னம்மாள் காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவளூர் கிராமம் மேலத் தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பொன்னம்மாள் காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது .

முன்னதாக கோவிலின் எதிர்புறம் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல் கால யாகசாலை பூஜை கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசம் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது‌.தொடர்ந்து மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

What do you think?

புதுச்சேரி. மொஹரம் பண்டிகை நாளை அரசு விடுமுறை

உழவர்கரை ஸ்ரீ முக்கூடல் ராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா