in

கீழப்பனையூர் ஸ்ரீ வல்லப கணபதி ஸ்ரீ மன்மதேஸ்வரர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கீழப்பனையூர் ஸ்ரீ வல்லப கணபதி ஸ்ரீ மன்மதேஸ்வரர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம்

 

கீழப்பனையூர் கிராமத்தில் ஸ்ரீ வல்லப கணபதி ஸ்ரீ மன்மதேஸ்வரர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் ஐவநல்லூர் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் எழுந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ வல்லப கணபதி ஸ்ரீ மன்மதேஸ்வரர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயங்கள் அமைந்துள்ளது.

இந்த ஆலயங்களில் திருப்பணி நடத்த திட்டமிடப்பட்டு,திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி மகா லட்சுமி ஹோமம் நவக்ரக ஹோமம் பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது.

மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து,விமான கும்பத்தை அடைந்து, கோபுர கலசத்தில் புனிதநீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பின்னர் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

What do you think?

துரோபதி அம்மன் ஆலய ஜீர்ணதாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

ஆனி மாதம் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு ஜேஸ்டாபிஷேகம்