in

நீர்ப்பறவைகளால் களைகட்டிய செஞ்சி ஏரி

நீர்ப்பறவைகளால் களைகட்டிய செஞ்சி ஏரி

 

செஞ்சியில், 500க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் ஏரியில் திரண்டு அமர்ந்திருந்த ரம்யமான காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள பி-ஏரியில், 500-க்கும் மேற்பட்ட நீர்க்கோழிகள் மற்றும் வெள்ளை நாரை கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இயற்கை எழில் மிகுந்த காட்சியை உருவாக்கின.

ஏரியின் நீர்ப்பரப்பிலும் கரையோரங்களிலும் பறவைகள் அமைதியாக உலா வந்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக, மாலை நேரத்தில் பறவைகள் கூட்டமாக அமர்ந்திருந்த காட்சி, செஞ்சி கோட்டையில் மாலைப் பொழுதில் சூரியன் மறையும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்ததுடன், இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்தது.

செஞ்சி பகுதியில் இயற்கைச் சூழல் மற்றும் பறவைகளின் வருகை அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

ஆனி மாத ஜோதி தரிசனம்