in

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

 

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தங்கத்தேர் உள்ளது. இந்த தங்கத் தேரை அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அண்ணாமலையார் கோவிலில் கட்சியினர் பணம் கட்டி கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் சுற்றி வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக இன்று அண்ணாமலையார் கோவிலில் தவெக கட்சியினர் தங்கத்தை இழுத்து வழிபாடு செய்தனர்.

What do you think?

நடராஜபுரம் துர்க்கையம்மன் ஆலய பால்குட காவடி விழா கோலாகலம்

நீர்ப்பறவைகளால் களைகட்டிய செஞ்சி ஏரி