in

 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்


Watch – YouTube Click

 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் உலக பிரசித்தி பெற்ற தர்ஹா அமைந்துள்ளது.

இந்த தர்ஹாவானது ஆயிரம் ஆண்டு கால பழமையான தர்காவாக செயல்பட்டு வருகிறது. இந்த தர்ஹாவிற்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதேபோல் அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த தர்காவிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தினர் வருகை புரிகின்றனர்.

குறிப்பாக இந்த தர்ஹாவில் நடைபெறும் கந்தூரி விழா என்பது உலகப் புகழ்பெற்றது. மேலும் அதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு நடைபெறும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றதாகும் இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினவரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த தர்ஹாவிற்கு அருகே சொந்தமாக உள்ள குளமானது ஆயிரம் ஆண்டு பழமையான குளமாகும் இந்த தர்ஹாவிற்கு வருகின்றவர்கள். இந்த குளத்தில் உள்ள நீரை புனித நீராக கருதி அதனை அருகவும் செய்கின்றனர்

மேலும் இந்த குளத்தில் உள்ள நீரானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சேரும் சகதியும் சாக்கடையாகவும் இருந்து வருவதால் இந்த குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும்.

மேலும் தர்காவை சீரமைத்து தர வேண்டும் என தர்ஹா சார்பாக பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர். தற்போது அந்த மனுக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தர்ஹாவின் வாயிலில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் 650-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் இந்த குளம் மற்றும் தர்காவை சீர் செய்து கொடுத்தால் மட்டுமே நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் இல்லை என்றால் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

தேரழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா ரளி அன்ஹா பெண்கள் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா நடைபெற்றது

வ.உ. சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்பிய திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து ஆர்ப்பாடம்