in

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முழியன்குளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

400 ஆண்  டுகள் பழமை வாய்ந்த முழியன்குளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

புதுச்சேரி அரியாங்குப்பம் கொமயூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பூரணாங்குப்பத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டுள்ள 400 ஆண்டுகால பழமை வாய்ந்த முழியன் குளத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர் குளக்கரையில் மரக்கன்றுகளை நட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குளத்தை சீரமைக்க நிதி வழங்கிய பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் ராஜசேகரன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகிய கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆதர்ஷ் , செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

What do you think?

திடக்கழிவு மேலான்மை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு பயிலரங்கம் தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமி,தலைமையில் நடைபெற்றது