in

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இளநீர் வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

திண்டிவனம் செஞ்சி சாலையில் ஆரணி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இளநீர் வியாபாரம் செய்தும், கலர் கோலமாவு விற்பபனை செய்தும் வாக்கு சேகரித்தார்.

ஆரணி பாராளுமன்ற அதிமுக வேட்ப்பாளர் கஜேந்திரன் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றார். இதன் ஒரு பகுதியாக இன்று மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அதிமுக தேமுதிக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேட்பாளருக்கு சால்வை அறிவிக்கும் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் புலியனூர் விஜயன் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன் தேமுதிக ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன்மாவட்ட நிர்வாகி பாலு மகேந்திரன் தேமுதிக ஒன்றிய அவை தலைவர் டி.சி .முருகன் அதிமுக நிர்வாகி கன்னியப்பன் பால்வண்ணன் அசோக் சிவகுமார் பாபு மற்றும் தேமுதிக நிர்வாகிகள் சங்கர் குபேந்திரன் அன்பு ரோஸ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

முன்னதாக திண்டிவனம் செஞ்சி சாலையில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த அவர் இளநீர் வியாபாரம் செய்தும், கலர் கோள மாவு விற்ப்பனை செய்தும், பொதுமக்களிடம் வாக்கு சேகரிததார். அப்பொழுது கோள மாவு கடையில் இருந்த பெண்கள் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக – தேமுதிக நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி அதிமுக பரப்புரையின் போது வயதான பெண்கள் ஆட்டம்

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு நெருக்கடி