in

பிரதமர் மோடி, மத்திய அரசியின் ஏழை, எளியவருக்காக செயல்படுத்தபட்ட திட்டம்


Watch – YouTube Click

பிரதமர் மோடி, மத்திய அரசியின் ஏழை, எளியவருக்காக செயல்படுத்தபட்ட திட்டம்

 

பிரதமர் மோடி, மத்திய அரசின் ஏழை, எளியவருக்காக செயல்படுத்தபட்ட திட்டமான பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம். ஜல் ஜீவன் திட்டம், ஆயுஸ்மான் திட்டம்

பிரதமரின் கிசான் திட்டம், வீடு கட்டும் ஆவாஸ் யோஜனா திட்டம்.

ஆகியவை தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியம், திருக்காட்டுப்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் சிறப்பாக அமல்படுத்தபட்டு
இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, நமது Britian Tamil Broad Casting சிறப்பு பார்வையில் பார்ப்போம்.

கடந்த 2014 – ம் ஆண்டு முதல் 2024 வரை 10 ஆண்டுகாலம், இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலானஅரசு மத்தியில் ஆட்சி செய்தது.

இந்த10 ஆண்டு ஆட்சிகாலத்தில், ஏழை எளிய மக்களுக்களின் வளர்ச்சிக்காக
பல்வேறு நலதிட்டங்களை அறிவித்தது. அதில், முக்கியத்துவமாக பார்க்கபட்டது. ஏழை, பின்தங்கியவர்கள் வீடுகட்டி கொள்ளும் திட்டமான, ஆவாஸ் யோஜனா திட்டம், இலவசமாக சிலிண்டர் பெற ரூபாய் ஆயிரத்து 600 வைப்பு தொகையுடன், 2016-ல் பிரதமர் மோடியால் உஜ்வால யோஜனா திட்டம், துவக்கிவைக்கபட்டது.

அதேபோல ஜல்சக்தி அமைச்சகத்தின், கீழ், ஜல் ஜீவன் திட்டமான, குடிநீர் இணைப்பு அறிமுகபடுத்தியது.

மேலும், ஆயுஸ்மான், அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும், ஆண்டுக்கு 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற மருத்துவ காப்பீடு, திட்டத்தையும் கொண்டுவந்தது.

குறிப்பாக, விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டமான, பிரதமரின் கிசான் திட்டமும் நாடு முழுவதும் செயல்படுத்தபட்டது.

இந்த திட்டங்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதிகளில் ஏழை எளியவர்கள், அதிகளவில் பயன் அடைந்துள்ளனர் என்று அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

இத்திட்டம் வறுமை கோட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு,சென்று சேர
பாஜக விவசாய பிரிவு,சங்க மாநில செயலாரும், இப்பகுதி ஒன்றிய நிர்வாகியுமான திரு.பூண்டி .வெங்கடேசன் பெரும் உதவிகரமாக இருந்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பாஜக மாநில விவசாய சங்க செயலாளராக இருந்து வரும், திரு.பூண்டி வெங்கடேசன், கடந்த 10 ஆண்டுக்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில், இணைந்து, கடந்த திருவையாறு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பிட்டு, போட்டியிட்டு, சுமார் 50 ஆயிரம் வாக்குகள் பெற்றவர். தற்போது நாடாளுமன்ற வேட்பாளராக பாஜக விரும்பி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில். போட்டியிடட்டால், இப்பகுதி மக்கள் ஆதரவு தருவோம், என்றும், அப்பகுதி மக்கள் சார்பில் தெரிவித்தார்.

மேலும், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டிய பெண் குறிப்பிடுகையில், சொந்த வீட்டில், வசிக்க வேண்டும் என்ற எங்களது மூன்று தலைமுறை  கனவு, பிரதமர் மோடி அரசின் மத்திய அரசு திட்டத்தால் கனவு நிறைவேறியதாக தெரிவித்தார்.

உஜ்வாலா யோஜனா சிலிண்டர் திட்டத்தில். தான், பயன் அடைந்ததோடு வங்கி கணக்கில் மானிய தொகை வந்துவிடுவதாகவும், பயன் அடைந்த பெண்மணி தெரிவித்தார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ,தெரு வாசற்படியில் பைப்போடபட்டு இரண்டு வேளையும், தண்ணீர் வருகிறது இது எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது
என்று, தண்ணீர் பிடித்துவரும் குடும்ப தலைவி தெரிவித்தார்.

இலவச 5 லட்சம் மத்திய அரசின் காப்பீடு,திட்டத்தில், தற்போதுவரை பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். 

பிரதமரின் கிசான் திட்டத்தை பொறுத்தவரை பூதலூர் ஒன்றியத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கில்வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம், மத்திய அரசு செலுத்தி, வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தொழில்நுட்ப பயிற்சி மையத் திறப்பு விழா

ராதிகா மெர்சண்ட் யார் தெரியுமா? எதனால் அம்பானி குடும்பத்துடன் இணைத்தார்