in

சிவ்தாஸ் மீனா அவர்களின் பெயரை தங்கி நிற்கும் வல்லம் பூங்கா


Watch – YouTube Click

சிவ்தாஸ் மீனா அவர்களின் பெயரை தங்கி நிற்கும் வல்லம் பூங்கா

 

தற்போது, தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக இருந்து வரும் திரு.சிவ்தாஸ்மீனா அவர்கள். கடந்த 2022-ம் ஆண்டு இங்கு வருகை புரிந்து,
அவரது திருகரங்களால் மிக சிறந்த பூங்கா என்று, தனது கைப்பட
எழுதியதோடு, திரு.சிவ்தாஸ் மீனா அவர்களே ஒரு மரம்கன்றையும் நட்டுவைத்த, செடி.

இன்றும் அவரது திருப்பெயரை தாங்கி, மரமாக வளர்ந்து. அவரது நினைவையும் தாங்கி, இன்று தமிழகத்திலேயே மிக சிறந்த பூங்காவாக போற்றப்படும் அளவுக்கு சிறந்து விளங்குகிறது நெற்களஞ்சிய, தஞ்சையை அடுத்த வல்லம் வளம் மீட்கும் பூங்கா .

இதுபற்றி, நமது Britain Tamil Broadcasting சிறப்பு பார்வையில் பார்ப்போம்.

சோழ மன்னன் ராஜராஜன் ஆண்ட மண்ணும், ஆயிரம் வருடத்தை கடந்து இன்றும் உலகை.வியக்க,வைக்கும் அதிசய கோபுரம் கொண்ட பெரிய கோயில் வீற்றியிருக்கும் .தஞ்சையை அடுத்த,வல்லத்தில், வளம் மீட்கும் பூங்கா, மிக பெரிய பரப்பளவில், காட்சியளித்து வருகிறது.

பூங்காவனமாகவும், சோலைவனமாகவும், காட்சியளிக்கும் இந்த பசுமை நிறைந்த பூங்காவில், உயிரினங்களான, மீன், வான்கோழி, ஈமு கோழி, நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள், கழுதைகள், குதிரைகள், நாய்கள், பறவைகள் என பல ஜீவன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த வளம்மீட்பு பூங்காவில், வல்லம் பகுதியில் இருந்து தினமும் கொண்டு வரப்படும் சுமார், 2.டன் குப்பைகள் பராமரிக்கபட்டு தரம்பிரிக்கபட்டு, மண்புழு கொண்டு இயற்கை உரம் தயாரித்து, வல்லம் பேருராட்சியே குறைந்த விலையில் இயற்கை உரம் விற்கபட்டு வருவதாக தெரிவித்தார் வல்லம் பேருராட்சி தலைவர் திருமதி.செல்வராணி கல்யாணி சுந்தரம்.

மேலும் செல்வராணி கல்யாணசுந்தரம், கூறுகையில், தமிழ்நாட்டில் சுமார்,548 பூங்காக்களில் முதல்10 இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடத்தில், மூன்றாவது இடத்தில், வல்லம் வளம் மீட்பு பூங்காஇருக்கிறது.

தமிழக, சட்டசபையிலேயே, தமிழக அமைச்சர் பாராட்டி உள்ளார்.

தற்போது இந்த பூங்காவை விரிவுபடுத்த சுமார் 5 கோடிக்கு திட்ட வரைவு தயாரிக்கபட்டு தமிழக அரசுக்கு அனுப்பபட்டு உள்ளது.

அந்த நிதி விரைவில் கிடைத்தால், வல்லம், வளம் மீட்பு, பூங்கா முதல் இடத்தை வகிக்கும் என்றார், வல்லம் பேருராட்சிதலைவி செல்வராணி கல்யாணசுந்தரம்.

மேலும். பெண்கள் இந்த நாட்டின் அஸ்திவாரம் என்ற பழமொழிக்கு ஏற்ப, பெண் சுய உதவி குழுபெண்கள், குப்பையையும் கோபுரமாக்கும் பணியில் ஈடுபட்டு, வருவதையும் காணமுடிந்தது.

இப்பணி பெண்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும், மாதம்தோறும் மருத்துவ பரிசோதனையும் பேரூராட்சி சார்பில், செய்யபடுவதாகவும் அப்பெண்கள்
தெரிவித்தனர்.

மேலும், குப்பைகளின் அருமை குறித்து வீடுவீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் பிரியா, செல்வி என்ற இரு பெண்மணிகள்.

இந்த பூங்கா குறித்து இதை பராமரிக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத உயிரினங்களுக்கும் உணவு கொடுத்து பலஜீவன்களை காக்கும் இடமாக, இந்த வளம் மீட்பு பூங்கா இருப்பதே மன நிம்மதி என்றார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை மீண்டும் திறக்கோரி போராட்டம்

நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்