ஸ்ரீகைலாசநாதர் 3ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் விழா திருக்கல்யாணம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தணியல் கிராமம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீகைலாசநாதர் 3ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தணியல் கிராமம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீகைலாசநாதர் 3ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக திருக்கல்யாணத்தை விழாவை முன்னிட்டு மங்கல தாம்பூல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.
தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் மணமகன் அலங்காரத்தில் பார்வதி பார்வதி தாயார் மணமகள் காட்சியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து கலசை பூஜையும் காப்பு கட்டும் வைபவம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் உற்சவர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கும் வைபவமும் தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மண கோலத்தில் இருந்த தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


