மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 38-வது பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் உள் அரங்கில் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் முனைவர் கோ.ப .செந்தில்குமார் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள்.
துணை முதல்வர் திருமதி புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜா, புல முதன்மையர் முனைவர் ராமசாமி , துணை முதல்வர் முனைவர் திருமதி புவனேஸ்வரி , நிர்வாக அலுவலர் சதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்–மே 2026 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர். பல்வேறு ரேங்க் பெற்ற 11 மாணவர்களில், இக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க் மற்றும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சிறப்புத் தகுதிச் சான்றிதழ்களை அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆதிபராசக்தி கல்வி மருத்துவ பண்பாட்டு அறநிலையத் துறை துணை தலைவர் முனைவர் கோ.ப .செந்தில்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும், இளநிலைப் பிரிவில் 201 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 92 மாணவர்களும் என மொத்தம் 293 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்விச் சாதனை படைத்துள்ளனர். இவர்களில் 56 பேர் சிறப்புத் தகுதியும், 207 பேர் முதல் வகுப்பும், 30 பேர் முதல் வகுப்பு சிறப்புத் தகுதியும் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்குக் கல்லூரி நிர்வாகம், முதல்வர், புல முதன்மையர், துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
உதவி பேராசிரியர் ராஜிவ் காந்தி நன்றி கூறினார்.


