in

சென்னை வில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சென்னை வில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

 

சென்னை வில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சீர் வழங்கினார்..

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் சீர் வழங்கினார்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் பணிகள் துறை சார்பில் 120 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு சந்தனம் இட்டு மலர் தேவை ஆசி வழங்கி வளைகாப்பு சீதனங்களை அமைச்சர் வழங்கினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆப்பிள், மாதுளை, வளையல், குங்குமம், மஞ்சள், இனிப்பு, புடவை என அடங்கிய தொகுப்புகள் சீதனமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹலன், மத்திய மண்டல துணை ஆணையர் கௌஷிக், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மைச்சர் ஆதவ் அர்ஜுனா சீர் வழங்கினார்..

What do you think?

த வெ.க அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

திமுக மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்