திடக்கழிவு மேலான்மை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு பயிலரங்கம் தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமி,தலைமையில் நடைபெற்றது
புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பில் திடக்கழிவு மேலான்மை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு பயிலரங்கம் தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமி,தலைமையில் நடைபெற்றது இதில் தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, எம்எல்ஏக்கள் நேரு, சாய் ஜெ சரவணன்குமார், செந்தில்குமார்,
மோகன்தாஸ் தலைமை செயலர் சரத் சவுகான் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பது சம்மந்தாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது, என்றார்.
அப்போது, சட்டப்பேரவை தலைவர் தேர்தல் எப்போது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், நடக்கும்போது வரும் என்று கூறிவிட்டு சென்றார்.
பேட்டி ரங்கசாமி முதலமைச்சர்
பின்னர் தவெக எம்எல்ஏ சாய் ஜெ சவரணன்குமார் கூறும்போது, தமிழக முதல்வர் விஜய், குப்பையை எடுப்பவர்களை உயர்ந்தவர்களாக பார்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
புதுச்சேரியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இபிஎப் உள்ளிட்டவை கட்டவில்லை. ஏன் கட்டவில்லை. அப்படி கட்டாவிட்டால் அந்த பணத்தை அரசே பிடித்தம் செய்து கட்ட வேண்டும். அவர்களுக்கு உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காப்பீடு செய்து கொடுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு துப்புரவு தொழிலாளருக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்து தர வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசே செய்ய வேண்டும். கிரீன் வாரியர், எச்.ஆர்.ஸ்கொயர் ஆகிய நிறுவனங்கள் சிறப்பாக செயல்படவில்லை.
அவர்களின் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. திருபுவனை தொகுதியில் 10 வண்டிக்கு 5 வண்டிதான் போட்டுள்ளனர். துப்புரவு தொழிலாளர்கள் 86 பேர் பணியில் அமைர்த்த வேண்டும். ஆனால் 36 பேர் தான் பணி செய்கின்றனர். 50 பேர் பற்றாக்குறை அங்குள்ளது. அதனால் தொகுதி தூய்மையாக இல்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

