அமித்ஷா வருகை – மதுக்கடைகளை மூட உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 8 மாலை 6 மணி முதல் மற்றும் ஆகஸ்ட் 9 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அமித்ஷா பயணிக்கும் வழித்தடங்களில் உள்ள உரிமம் பெற்ற மதுபானக் கடைகள், சாராயக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவு.
மூடப்படும் பகுதிகள்: கோரிமேடு எல்லை, ராஜீவ் காந்தி சதுக்கம், லதா ஸ்டீல் ஹவுஸ், ஈசிஆர் சாலை, சிவாஜி சதுக்கம், ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு, ஹோட்டல் அதிதி சந்திப்பு, புதிய லோக் நிவாஸ், பிஏபி மைதானம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்கள்.

