in

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் கடை எண் 2553 டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் அருகில் 300 மீட்டர் தூரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் கோவில் இருந்து வருகிறது.

இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுக் கடையை மூட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும் இந்தக் கடையை மூடாததால் கோபம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட மதுக்கடையை திறப்பதற்கு முன்பு முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் கடலூர் டாஸ்மாக் மேலாளர் கந்தன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி கடையை மூடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் நாளை மீண்டும் மீறி கடையை திறந்தால் கடை மற்றும் மதுபான பாட்டில்கள் அடித்து நொறுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

தொண்டி: வலைக்குள் சிக்கிய 30 கிலோ நட்சத்திர ஆமை

கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீட்டு,