in

திருவாடானை அருகே லாரி மோதி நடந்து சென்ற முதியவர் பரிதாப பலி

திருவாடானை அருகே லாரி மோதி நடந்து சென்ற முதியவர் பரிதாப பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கப்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் சுப்பிரமணி (76). இந்த முதியவர், ஆனந்தூர் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அணை கட்டுவதற்காகப் பொருட்களை ஏற்றி வந்த அரசு டாரஸ் லாரி, நடந்து சென்ற முதியவர் மீது மோதி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரைக் தேடி வருகின்றனர். மேலும், சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

What do you think?

கோவை மாவட்டத்தின் நீலாம்பூர், கணியூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றம்