மண்டபத்தில் கோலாகலம் – ஸ்ரீ கூனி மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு உற்சவ திருவிழா!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அம்பலகாரர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கூனி மாரியம்மன் கோவிலில் 2026-ம் ஆண்டுக்கான முளைக்கொட்டு உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
முளைக்கொட்டு உற்சவத்தை முன்னிட்டு பெண்கள் பாரம்பரிய முறையில் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழா நிகழ்வுகள் பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மண்டபம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கூனி மாரியம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
