in

அவரே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை குடியரசுத்தலைவர் திரும்பப்பெற வேண்டும்


Watch – YouTube Click

விருதுநகர் ரயில்நிலையத்தை உலக தரத்திற்கு மேம்படுத்தும் மத்திய அரசின் “அம்ரித் பாரத்” திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்து முதல்கட்ட பணிகள் வரும் மார்ச் 31 முடிவடைவதாகவும் பேட்டியளித்தார்

விருதுநகர் ரயில்நிலையம் மத்திய அரசின் “அம்ரித் பாரத்” திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்புகளான காத்திருப்பு கூடங்கள்,கழிப்பறை,லிப்ட் வசதி,இலவச இணைய வசதி,உள்ளூர் தயாரிப்புகளுக்கான கடைகள்,நவீன ஓய்வுஅறைகள்,மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்,நடைமேடை போன்றவை மேம்படுத்த கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இன்று விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் சென்று ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.இந்த பணிகளால் பயணிகளுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டுவிடாமல் கவனமுடன் பணிகளை செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்து வருகிறது என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் பிளாட் பாரங்கள் மற்றும் மேற்கூரைகள் செப்பனிப்பட்டு ரயில் நிலைய முகப்பும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் பார்சல் ஆபிஸ் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் வரும் மார்ச் 31 ந்தேதி நிறைவடையும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் இந்த திட்டம் நல்லபடியாக நிறைவடையும் எனதான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் எந்த ஆளுநரும் கடைபிடிக்காத ஒரு வித்தியாசமான ஆளுநராக ரவி செயல்படுவதாகவும்,மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கட்சி,மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்த கவர்னர் உரையை புறக்கணித்து அரசியல் செய்வதும்,ஒரு பாஜககாரரை போல் நடந்து கொண்டு அரசியல் சாதனத்திற்கு உட்படாமல் மீறி அவர் செயல்படுவதால் அவரே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை குடியரசுத்தலைவர் திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் உரிமைகளை பாராளுமன்றத்தில் கேட்ட நேரம் கொடுப்பது கிடையாது.மாநிலங்களுக்கான நிதி குறைப்பை பற்றி பேச அனுமதிப்பது கிடையாது.தமிழகத்திற்கு எதிரான மனநிலையில் மோடி அரசு உள்ளதை இதுபோன்ற செயல்கள் காட்டுவதாகவும் தெரிவித்தார்.90 சதவிகிதம் எய்ம்ஸ் பணிகள் முடிந்ததாக சொன்னா நட்டாவிற்கு எதுவும் தெரியாது எழுதிக்கொடுப்பதை படிப்பவர் அவர் என்றும் தொடர்ந்து காந்தி,நேரு போன்ற தேசியத்தலைவர்களை அவமானமாக பேசுவதையே வழக்கமாக பாஜக கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டணி குறித்து அவர்கள் பேசுவார்கள் என்றும் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்து பேசி பிரதமர் வேட்பாளரையும் அறிவிப்பார்கள் என்றார்.

மேலும் இந்த நிகழ்வின்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்


Watch – YouTube Click

What do you think?

நான் கடன் வாங்காத நாளும் இல்லை கடன் கேட்காத மனிதர்களும் இல்லை… ஆர் ஜே பாலாஜியின் கடந்த காலம்

ஆ ராசா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்