in

மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற புதுச்சேரி திருநங்கை

மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற புதுச்சேரி திருநங்கை

புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா விழுப்புரத்தில் கடந்த ஒன்பதாம் தேதி ஆரம்பிக்க பட்டு ஏப்ரல் 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

இவ் விழாவிற்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

அதன்பிறகு மிஸ் திருநங்கை 2024 காண தேர்வு நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்ட போட்டியில் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேருக்கு பட்டம் கொடுக்கப்பட்டது.

இவர்களில் மிஸ் 2024 ஆம் ஆண்டுக்கான திருநங்கையாக சென்னையை சேர்ந்த ஷாம்சி தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை புதுச்சேரி வர்ஷாவும் மூன்றாம் இடத்தை தூத்துக்குடி சுகப்பிரியாவும் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவில் சினிமா நடிகைகள் தீபா, அம்பிகா, நடிகர் ஸ்ரீகாந்த், தீபக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

அதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதிகள்

தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியானது…. கூலி….