in

ரோஜாப்பூ வழங்கியும், பன்னீர் தெளித்தும் பள்ளி மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்….


Watch – YouTube Click

ரோஜாப்பூ வழங்கியும், பன்னீர் தெளித்தும் பள்ளி மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்….

 

கோடை விடுமுறைக்கு பின் சக தோழிகளை சந்தித்த மாணவிகள் உற்சாகம்….திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ரோஜாப்பூ வழங்கி மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்….

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 06- ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கோடை விடுமுறை முடித்து திருச்சி மாவட்டத்தில் திருச்சி லால்குடி முசிறி துறையூர் திருவெறும்பூர் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இன்றைய தினம் 1- ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடித்து பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து இன்முகத்துடன் வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள்.

விடுதியில் சேர்ந்து பயிலும் மாணவிகளும் தங்களது பெற்றோர்களுடன் விடுதியில் தங்கி பயில தேவையான உடைமைகளுடன் ட்ரங்க் இரும்பு பெட்டியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

கோடி விடுமுறை முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு சக தோழிகளை சந்தித்த மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

திண்டுக்கல்லில் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் பேட்டி

திருத்தணியில் காதலியை கரம் பிடித்த நடிகர் பிரேம்ஜி