in

நாமக்கல் பெருமாள் மலை இளைய பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்


Watch – YouTube Click

நாமக்கல் பெருமாள் மலை இளைய பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

 

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு வட்டம் இறையமங்கலம் பெருமாள் மலை இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி ஆலயம் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், சின்னசேலம், தர்மபுரி, திருச்செங்கோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகின்றது.

கடந்த 14ஆம் தேதி சித்திரை 1-ஆம் நாள் அன்று சிறப்பு பூந்தேரோட்டம் அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருத்தேர்விழா நிகழ்ச்சி தொடங்கியது.

கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் மிகவிமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் சீர்தடுகளை கொண்டு வந்ததும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஒவ்வொரு திருமண சடங்குகளை மிக விமர்சையாக செய்தனர்.

அப்போது காப்பு கட்டி துவங்கி மாலை மாற்றுதல் திரு மாங்கல்ய தாரம் அணிதல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை நடத்தினர் பின்பு பெருமாளுக்கும் தேவியருக்கும் மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்..


Watch – YouTube Click

What do you think?

ரைஸ்மில் உரிமையாளரான தந்தையை மகன் செய்த கொடூர செயல்

ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம்