in

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது


Watch – YouTube Click

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது

 

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது இந்த தட்டுப்பட்டை போக்க மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகிய நீங்கள் நினைத்தால் பால் தட்டுப்பாட்டை போக்க முடியும் என மகளிர்களிடம் முதலமைச்ச ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52 ,000 கிராமப்புற சுய உதவிக் குழு பெண்களுக்கு விவசாய ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் நோக்கில் 14 வகை காய்கறி, பழம் மற்றும் கீரை வகைகள் கொண்ட விதை தொகுப்புகளை வழங்கும் விழா புதுச்சேரி குருமாம்பட்டு கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ரங்கசாமி விழாவிற்குத் தலைமை‌ தாங்கி 14 வகை காய்கறி, பழம் மற்றும் கீரை வகைகள் கொண்ட விதை தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…

புதுச்சேரியில் சத்தான காய்கறிகள் மற்றும் மருந்தில்லா காய்கறிகளை ஊட்டச்சத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி வீடுகளில் மாடி தோட்டம் வளர்த்து அதில் மருந்தில்லா காய்கறி செடிகளை வளர்க்க வேண்டும் என்றார்.

மேலும் இந்த ஆண்டு முதல் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட ரங்கசாமி அதற்காக சேதராப்பட்டில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஊர் காவல் படை வீரர்கள் காலி இடங்களை நிரப்ப 1050 பேருக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு உள்ளது எனவே பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை வேண்டும்.

புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது ஆனால் 50,000 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது எனவே வெளி மாநிலத்தில் இருந்து பால் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாடு வளர்ப்பவர்களுக்கு மானிய விலையில் மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது எனவே விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத்‌ தலைவர் செல்வம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், அரசுச் செயலர் நெடுஞ்செழியன் திட்ட இயக்குநர் அருள்ராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கிராமப்புற சுய உதவி குழு பெண்கள் பலரும் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாட்டில் இன்று முதல் மது உயர்வு

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் சிறப்புகள் என்ன?