in

முதலாம் ஆண்டு செவிலியர் வகுப்பு துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி


Watch – YouTube Click

முதலாம் ஆண்டு செவிலியர் வகுப்பு துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி

 

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவர்கள் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்க்கும் விழா நடைபெற்றது.

இந்திரா காந்தி செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மருத்துவ அதிகாரிகளை அடுத்து நோயாளிகளுக்கு சிறந்த சேவை செய்கின்ற செவிலியர்கள் நீங்கள் என்றும், அப்படிபட்ட பணியை செய்கின்ற நீங்கள் கவனமாக படிக்க வேண்டும் என்றும், அப்படி படித்தால் தான் நோயாளிகளுக்கு உதவி செய்ய முடியும் என்றார்.

மேலும் இந்த சேவையை செய்ய சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். மிகவும் பெறுமையாக அனுசரித்து பணி செய்ய வேண்டும். சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைய பணிகளை நிரப்பி வருகிறோம். வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், இந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியில் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டு புதுச்சேரியில் 60, காரைக்காலில் 40 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நீங்கள் படித்து முடித்து சிறப்பாக பணியாற்றி இவங்க நல்ல நர்ஸ் என்ற பெயரை எடுக்க வேண்டும் என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

மருந்து கடை மற்றும் பேக்கரி உடைப்பு முகமூடி திருடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

புதுச்சேரியில் தனலட்சுமி வங்கியின் 257 வது கிளையை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்