in

மருந்து கடை மற்றும் பேக்கரி உடைப்பு முகமூடி திருடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை


Watch – YouTube Click

 

மருந்து கடை மற்றும் பேக்கரி உடைப்பு முகமூடி திருடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

புதுச்சேரி வில்லியனூரில் கடந்த வாரம் கண்ணகி அரசு பள்ளி அருகே உள்ள பாலமுருகன் பேக்கரி கடையில் அதிகாலை புகுந்த முகமூடி கொள்ளையன் அங்கிருந்த 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

அதே நாளில் வில்லியனூர் மூப்பனார் காம்ப்ளக்ஸ் உள்ள சேகர் என்பவர் கடையிலும், கிளீனிக்கிலும் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளை அடித்தான். சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த அவனது உருவத்தை வைத்து போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதிகாலை வில்லியனூரில் உள்ள அதே பாலமுருகன் பேக்கரி கடைக்குள் கடந்த வாரம் இரும்பு ராடை வைத்து எப்படி கொள்ளையடித்தானோ அதேபோல் அதிகாலையில் இரும்புராடல் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையன் கடைக்குள் ஆராய்ந்து விட்டு பணம் எதுவும் இல்லாததால் ஏமாந்து சென்ற முகமூடி கொள்ளையன் பின்னர் அங்கிருந்து அரியூர் பெஸ்ட் மெடிக்கலுக்கு சென்ற முகமூடி கொல்லையன் அங்கு இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்று விட்டான்.

தற்போதைய இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து முகமூடி கொள்ளையன் கடைகளை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முகமூடி கொள்ளையனை பிடிக்க முடியாமல் வில்லியனூர் போலீசார் திணறி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சாத்தூரில் மினி பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி

முதலாம் ஆண்டு செவிலியர் வகுப்பு துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி