ஆனி மாதம் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு ஜேஸ்டாபிஷேகம்
சேலம் முதல் அக்ரஹாரம் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆனி மாதம் மூல நட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பால் தயிர் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் திருமஞ்சனம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 508 வடை மாலை அணிவித்து துளசி மாலை சூட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது பக்தர்கள் ஆலயத்தில் நான்கு முறை பிரகாரமாக துளசியை கையில் வலம் வந்து ஆஞ்சநேயரின் திருவடியில் சமர்ப்பித்தனர் பிறகு தீபாராதனை காண்பித்து சந்தனத்தால் அபிஷேகம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டதும் மூலவர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்ததும் உற்சவருக்கு மஞ்சள் பட்டாடை கட்டி வண்ண மலர் மாலை அணிவித்து சிறப்பாக அலங்கரித்தனர்.

தொடர்ந்து பிரம்மாண்டமான தளிகையில் சாம்பார் சாதம் தயிர் சாதம் அன்னப் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்தனர் தெய்வங்களுக்கு கும்ப ஆரத்தி காட்டி கூடை விசிறி சா மரம் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு விதமான சஸ்திரங்களால் சோடச உபச்சார பூஜை செய்து பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் சடாரி மரியாதையுடன் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.


