in ,

பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


Watch – YouTube Click

பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

சொத்துக்குவிப்பு வழக்கு பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்ததை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார்.

அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 2016ல் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017-ம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

இவ்வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் பொன்முடி விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது, அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அரசுடமையாகும் நியோமேக்ஸ் சொத்துகள் ஐயோ பாவம் முதலீட்டாளர்கள்

அவசர கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கேள்வி எழுப்பி பரபரப்பு