in

அவசர கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கேள்வி எழுப்பி பரபரப்பு


Watch – YouTube Click

அவசர கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கேள்வி எழுப்பி பரபரப்பு

 

கரூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கேள்வி எழுப்பி பரபரப்பு கிளப்பினார் – இதனால் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாமன்ற உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் துணை மேயர் காரன் சரவணன் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் தொடங்கிய போது மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் ராஜா, மாமன்ற உறுப்பினர் பசுவை சக்திவேல் ஆகியோர் கூட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பங்கேற்பதில் என மேயரிடம் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து கூட்டமானது துவங்கியது அப்போது தீர்மானங்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டன. அவசர கூட்டத்திற்கான கேள்வி நேரத்தின் போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்டீபன்பாபு வரியில்லா இனங்களில் குறைபாடுகளை கணினியில் நிவர்த்தி செய்யும் பொருட்டு, இடிக்கப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் கண்டறிய இயலாதவை என சுமார் 1 கோடியே 23 லட்சத்து 18 ஆயிரத்து 881 ரூபாய், இரட்டை பதிவு 4 லட்சத்து 52 ஆயிரத்து 696 ரூபாய் என மொத்தம், 1 கோடியே 27 லட்சத்தி 71 ஆயிரத்து 577 ரூபாய் தொகையை நீக்கம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். இந்த தீர்மானம் குறித்து மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அப்போது அதிமுக கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் ஆட்சேபனை தெரிவித்தார். அதிமுக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பேசியதால் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பாஜக வழக்கறிஞர் தலைவர் பால்கனகராஜ் வாதிட்டார்