in

சேலம் சின்ன முனியப்பனுக்கு ஆனி மாத முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை

சேலம் சின்ன முனியப்பனுக்கு ஆனி மாத முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை

 

சேலம் சின்ன முனியப்பனுக்கு ஆனி மாத முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆலய அர்த்தமண்டபத்தில் காட்சி தரும் உற்சவர் ஸ்ரீ சின்ன முனியப்ப சாமிக்கு என்னை காப்பு சாற்றி பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் மஞ்சள் திருமஞ்சனம் அரிசி மாவு சந்தனம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றதும் இறுதியாக சொர்ண அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு ஆலயத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் ஸ்ரீ சின்ன முனியப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து ஆதி மூலவர் முனியப்ப சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மாலை சூட்டி சிறப்பாக அலங்கரித்தனர்.

தொடர்ந்து தெய்வங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியம் செய்து மஹா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சின்ன முனியப்ப சுவாமி வணங்கி வழிபட்டனர்.

கலந்து கொண்ட பக்தர்களுக்கும் விபூதிக்கும் பிரசாதம் வழங்கப்பட்டதும் உற்சவர் சின்ன முனியப்ப சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

ஆனி மாதம் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு ஜேஸ்டாபிஷேகம்

ஸ்ரீ ராஜ வராகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்