in

மோடி பாராட்டிய படத்திற்கு தடையா…. சர்ச்சையில் சிக்கிய பிரியாமணி படம்

மோடி பாராட்டிய படத்திற்கு தடையா…. சர்ச்சையில் சிக்கிய பிரியாமணி படம்

பிரியாமணி மற்றும் யாமி கெளதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் வெளியான ‘ஆர்டிகல் 370′ படம் சக்கை போடு போடுகிறது.

இப்படத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு பெற்று வசுலை வாரி குவிக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியும் வெகுவாக பாராட்டி இருந்தார்.

ஆகஸ்ட் 6, 2019, இந்தியர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு முக்கியமான நாளாக மாறியது. இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இந்திய அரசாங்கதால் ரத்து செய்யபட்ட நாள் . இந்த அறிவிப்பு நாட்டின் சில பகுதிகளில் மகிழ்ச்சியையும் சில பகுதிகளில் பயங்கரமான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் யாமி கெளதம் இயக்கிய ‘ஆர்ட்டிகல் 370′ ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் கலந்து இந்தியாவின் அதே காலகட்டத்தின் அத்தியாயங்களைப் படம் பிடித்து நம்முன்னே கட்டுகிறது.

தீவிரவாதி புர்ஹான் வானியின் எழுச்சியால் 2016 முதல் காஷ்மீரில் ஏற்பட்ட அமைதியின்மையிலிருந்து 370 வது பிரிவை அகற்றுவது வரையிலான, நிகழ்வுகளை அதிரடி திருபங்களுடன் அழகாக இப்படத்தில் இயக்குனர் காட்டிஇருக்கிறார்.

வானி கொல்லப்பட்டதும், அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சலசலப்புக்கு பிறகு, படத்தின் கதைக்களம் 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு மாறுகிறது, மேலும் அதன் குற்றவாளிகளைத் தேடுவது என்று கதை நகர்கிறது.

இந்நிலையில் ‘Article 370’ படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட பட குழு திட்டமிட்டபோது அங்குள்ள தணிக்கை குழுவினர் இப்படத்தை பார்த்து சர்ச்சையான சில காட்சிகள் இருப்பதாக கூறி அப்படத்திற்கு தடையை விதி விடுவித்தனர்.

இதனால் ஆர்டிகல் 370 படத்தை வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மோடி பாராட்டிய படத்திற்கு வெளிநாடுகளில் தடையா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

What do you think?

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

நடிகை படத்தை போட்டு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்