in ,

தங்கம் விலையில் மாற்றமில்லை


Watch – YouTube Click

தங்கம் விலையில் மாற்றமில்லை

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்ட நிலையில், வாரத்தின் 3-வது நாளான இன்று எந்த வித மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி (17-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ரூ.54,960-க்கும், கிராமுக்கு ரூ.6,870-க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 0.50 காசுகள் குறைந்து ரூ.90-க்கும், கிலோ ரூ.500 குறைந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (16-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கும், கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-க்கும் விற்பனையானது.


Watch – YouTube Click

What do you think?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது

நாகை நகரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள்