in

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் நடிப்பு…. இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் நடிப்பு…. இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்

ஒரு பக்கம் தன் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறார். மறுபக்கம் கோட் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார் தளபதி விஜய்.

ரசிகர்களின் பல வருட தவத்திற்கு பலன் கிடைத்து விட்டது. நேற்று விஜய் அவர்கள் தன் கட்சியின் பெயரான தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை அறிவித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவோம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ரசிகர்களும், திரைதுறை பிரபலங்களும் பல கட்சித் தலைவர்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்களுக்கு பணியாற்ற விரைவில் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவித்த நிலையில் காஞ்சிபுரத்தில் தற்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பட்டாளங்கள் பலர் நடித்துக் கொண்டிருக்கும் கோட் படப்பிடிப்பிலிருந்து தளபதி விஜய் அவர்கள் தனது புதிய லுக்குடன் ரசிகர்களுக்கு கையை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

நடிகை அஞ்சலியின் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் சண்டை முற்றிய நிலையில்… ஆடிட்டரை நியமித்த நீதிமன்றம்