in

திண்டுக்கல் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி ஊர்வலம்

திண்டுக்கல் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி ஊர்வலம்

திண்டுக்கல் பழனி ரோடு செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 81 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த மாதம் 23ஆம் தேதி சாமி சரக்குகள் மற்றும் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையான இன்று செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு PVதாஸ் காலனி முனிசிபல் காலனி நெட்டுதெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மலையடிவாரம் கோட்டை குளத்தில் பால்குடம் அலங்கரித்து அழகு குத்தியும் பூத்த மலர் பூச்சொரிதல் விழாக்குழு சார்பாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் காளியம்மன் வீற்றிருக்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அந்தந்த பகுதிகளுக்கு சென்றனர்.

முதல் நாள் திருவிழாவில் 14 அடி நீளம் கொண்ட அழகு குத்தியும் உடலில் 32 அழகு குத்தியும் கருப்பசாமி வேடமடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்

இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு மேட்டு ராஜகாபட்டி தெப்பத்தில் அம்மன் கரகங்கள் அலங்கரித்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் சன்னதி வருதலும் புதன்கிழமை மாவிளக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் விளக்கு வழிபடும் நடைபெற உள்ளது

வியாழக்கிழமை மஞ்சள் நீராடி உழைப்பாளி எடுத்து அம்மன் கங்கை சென்ற இடைதலும் வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவ விழாவும் சனிக்கிழமை தெப்ப உற்சவ விழாவும் நடைபெற உள்ளன

விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டான்மை மாரிமுத்து மணியம் சின்னமணி பிரவீன் வள்ளுவன் ஊர் தலைவர் சுந்தரம் காரியதரிசி பெருமாள் உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்

பூத்த மலர் பூச்சொரிதல் விழா குழுவினர் நேரு வெங்கடேசன் கணேசன் மதுரை வீரன் சாமியப்பன் வேலு சிவன், செல்வம் சிவா ஞான கணேசன் லோகநாதன் உள்ளிட்டோர் பூத்தேர் அலங்காரத்தினை சிறப்பாக செய்திருந்தனர்

முன்னதாக நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மாமன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா ஜெயராமன் பகுதிச் செயலாளர்கள் ஜானகிராமன் பஜுல் ஹக் உள்ளிட்ட கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

What do you think?

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பேருந்து நிழல்குடையில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு