in

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் வத்சராபிஷேகம்

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் வத்சராபிஷேகம்

 

மயிலாடுதுறையில் இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் 9-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20-ஆம் ஆண்டு அறுபத்துமூவர் வீதியுலாவில் பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற சோடச தீபாரதனையிலும் அறுபத்துமூவருக்கு நடைபெற்ற மகாதீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.

மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பழமை வாய்ந்த இக்கோயிலின் 9-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20-ஆம் ஆண்டு அறுபத்துமூன்று நாயன்மார் வீதியுலாவும் விமரிசையாக நடைபெற்றது.

 

இதனை முன்னிட்டு காலை பஞ்சமூர்த்தி, அறுபத்துமூவர், தொகையடியார், ஶ்ரீமணிவாசகர், சேக்கிழார், மூலவர், எழுந்தருளி திருமேணிகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் அறுபத்துமூன்று நாயன்மார்கள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டனர்.

தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனக்கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமூர்திகளுக்கு சோடச தீபாரதனை, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அறுபத்துமூவருக்கு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகளுடன் அறுபத்துமூவர் வீதியுலா நடைபெற்றது. சிவ கைலாய வாத்தியங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க, தீவிட்டி ஏந்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாரதனை எடுத்து தரிசனம் செய்தனர்.

What do you think?

கூறைநாடு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலய 4 ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம்

கல்யாண சுந்தரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்