மயிலாடுதுறை வேம்படி மாரியம்மன் கோவிலில் 24-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் 36, அருண்மொழிதேவன் அக்ரஹாரத் தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வேம்படி மாரியம்மன்,ஸ்ரீ பாலகணபதி,ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 24-ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.
முன்னதாக பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இருந்து பால்குடம் புறப்பட்டு கிராமபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்து.
பின்பு பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பித்து கஞ்சி வார்த்தலும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு பம்பை உடுக்கை மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீ வேம்படி மாரியம்மன்,ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா காட்சி நடைபெற்றது.
வீதியுலாவின் போது கிராம மக்கள் தங்கள் இல்ல வாசலில் தீப ஆராதரையும் அர்ச்சனையும் செய்யப்பட்டது.இவ்விழாவில் ஏராளமான கிராமவாசிகள் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


