in

கல்யாண சுந்தரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்யாண சுந்தரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு வேலைகளை தடுத்து சாதிய உள் நுக்கத்தோடு செயல்பட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாநகராட்சி உட்பட்ட நாகேஸ்வரன் தெற்கு வீதியில் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருந்து வாழ்ந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த திமுக அரசால் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு வேலைகளை தடுத்து சாதிய உணவகத்தோடு செயல்பட்டு வரும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரத்தையும் அவரது கையாள் சோடா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கண்டித்தும் குடியிருப்புக்கு ஒப்பந்தக்காரரிடமிருந்து கையூட்டு கிடைக்காததால் தாக்கல் செய்த உயர்நீதிமன்ற வழக்கு தாமாக முன்வந்து திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் விவேகானந்தன், சமத்துவ வழக்கறிஞர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு குணவேந்தன், மாவட்ட துணை செயலாளர் வீரமுத்து, திருவிடைமருதூர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சாத்தங்குடி சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் இளங்கோவன், கரிகாலன் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர்கள் வேளாக்குடி ஐயப்பன், காசி தமிழ், ஒன்றிய செயலாளர் தென்னவன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சிவசக்தி மாலா, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர பொறுப்பாளர் சக்தி, மற்றும் ஒன்றிய மாநகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்‌. அடுத்த கட்ட போராட்டமாக மாநிலங்களவை உறுப்பினர் அலுவலகத்தை முட்டையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

What do you think?

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் வத்சராபிஷேகம்

531 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்