தாறுமாறாக சரிந்த தங்கம்.. காரணம் என்ன?
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8,000 வரை விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க வட்டி விகிதங்கள், டாலர் மதிப்பு உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் சந்தை மாற்றங்கள் ஆகியவை தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இப்போது தங்கம் வாங்கலாமா இல்லை இன்னும் பொறுத்திருந்து வாங்கலாமா என்பது குறித்து நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தடாலடியாக குறைந்து வருகிறது. அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
கடந்த 8 நாட்களில் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.8,000 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.1,08,000 என்ற அளவில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சரிவுக்கான முக்கிய காரணமாக அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்பில் ஏற்பட்ட மாற்றம் என கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பிற நாடுகளின் நாணயங்களைப் பயன்படுத்தும், வாங்குபவர்களுக்கு அதிக விலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது.