இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா
இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா 15ஆம் நாள்பாஞ்சாலி துகிலும் பரந்தாமன் அருளும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா 15ஆம் நாளை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் திரௌபதியம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ அர்ஜுன மகாராஜா ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்கள் பாஞ்சாலி துகிலுரிதலின் போது, தன்னை முழுமையாக நம்பிய திரௌபதிக்குக் கண்ணன் [பரந்தாமன்] தனது திருவருளால் துகில் தந்து காத்தருளியது பக்தியின் மகிமையையும், இறைவனின் கருணையையும் உணர்த்தும் உன்னத காட்சியை வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூரத்தை ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


