in

100 நாள் வேலைத்திட்டம்: மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

100 நாள் வேலைத்திட்டம்: மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்னும் பெயரை விபிஜி ராம்ஜி என்று மாற்றி 100 நாள் வேலைதிட்டத்தையே ஒலிக்க திட்டமிடும் என்ற கூறி ஒன்றிய மோடி அரசை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கருப்பு பேட்ச் அணிந்து சட்ட நகலை எரித்து திண்டிவனம் நேரு விதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்னும் பெயரை வி பி ஜி ராம்ஜி என்று மாற்றி இன்னொரு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க திட்டமிடும் எனக் கூறி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதனை தொடர்ந்து திண்டிவனம் நேர்விதி சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து சட்ட நகலை எரித்தும் அதனைக் கிழித்தும் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

What do you think?

காஞ்சிபுரம் மன்னார் சாமி பச்சையம்மன் ஆலய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவிற்கான கம்பம் ஊண்டும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.