in

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

 

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா – 10-ம் நாள் கோகுல சிறப்பு ஜலக்கீரீடை .

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா கடந்த 26 6 2026 அன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

மேலும் ஒவ்வொரு நாளும் மகாபாரத கதையின் வரலாறு நாடக நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. அதனை ஒட்டி 10ம் நாள் கோகுலத்தின் சிறப்பும் ஜலகிரீடை என்ற நாடகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ அர்ஜுனா மகாராஜா மற்றும் ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு கிராம வீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கான உபயதாரர் யாதவர் குல சமுதாயம்.

What do you think?

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

தீர்த்தத்தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில் குடமுழுக்கு விழா