ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம்
முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முன்னூர் ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடாவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் அடிப்பிரதட்சணமாக வலம் வரும் பரிவார கிரிவலத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பார்வதி தாயுடன் ஸ்ரீ சர்வேஸ்வரன் மைய மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு மைய மண்டபத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளியினர்.
தொடர்ந்து கோவிலின் பிரதான கோபுரமான தெற்கு கோபுர கொடிமரம் முன்பு முதல் பரிவார கிரிவலம் சிவாச்சாரர்கள் வேத பாராயணம் பாடி முன்னே செல்ல ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் பக்தர்கள் அடிப்பிரதட்சணமாக முதல் பரிகார கிரிவலம் வந்தனர்.

தொடர்ந்து இரண்டாவது பரிவார கிரிவலத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் முன்னே செல்ல பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி அடிபிரதட்சணமாக பரிவார கிரிவலம் வந்தனர்.
மேலும் மூன்றாவது பரிவார கிரிவலத்தில் மங்கல இசை மற்றும் சிவ வாத்தியங்களுடன் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் பக்தர்கள் அடி பிரதோஷணமாக பரிவார கிரிவலத்தில் சுற்றுவட்டார கிராம ஆயிரக்கணக்கானபொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


