தவெக மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு
திண்டிவனத்தில் தவெக மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு – மாவட்ட செயலாளர் சக்திவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்..
விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட தலைமை அலுவலகம் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் எதிரே திறக்கப்பட்டது, விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலாளர் சக்திவேலை தலைமை அலுவலகத்தில் அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடகிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தலைமை அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

