in

நாமக்கல் பக்தர்கள் சார்பில் திருவாசகம் முற்றோதல்

உலக புகழ் திரு உத்திரகோசமங்கை ஆலயத்தில் நாமக்கல் மாவட்ட பக்தர்கள் சார்பாக திருவாசகம் முற்றோதல் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற திரு உத்திர கோசமங்கை ஆலயத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திரு உத்திரகோசமங்கை சென்று மங்களநாதர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் என்னும் ஞான வேள்வி சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை திரு உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் ஆலயத்தில் மரகத நடராஜர் சன்னதி அருகில் திருவாசகம் முற்றோதல் என்னும் ஞானவேள்வி காலை 6 மணிக்கு பொத்தனூர் சிவ. சிவக்குமார் ஐயா அனைத்து சிவனடியார்கள் திருக்கூட்டம் அவர்கள் தலைமையில் துவங்கியது. விழாவில் ஆலயத்தில் உள்ள மங்களநாதர் சுவாமி அர்ச்சகர் ஐயா தேங்காய், பழம் உடைத்து விநாயகர் மற்றும் சூரிய வழிபாட்டுடன் நிகழ்வினை துவங்கி வைத்தார்கள். விழாவின் நிகழ்வில் முக்கிய விருந்தினராக பழநிவேல் பாண்டியன் திவான் ஐயா இராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஐயா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து கொடுத்தார்கள்.

காலை 6 மணிக்கு தொடங்கிய திருவாசகம் முற்றோதல் மாலை 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் மற்றும் கோவை அரண்பணி அறக்கட்டளை தலைவர் சிவ.திரு. பவானி தியாகராசன் ஐயா அவர்கள் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். மேலும் உத்திரகோசமங்கையில் சிவ.திரு. குமணன் ஐயா மற்றும் கண்ணன் ஐயா அவர்கள் அடியார்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வழிபாடு நிறைவு பெற உறுதுணையாக இருந்தார். பல மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து விழாவில் கலந்து கொண்ட சிவனடியார்கள் மற்றும் அடியார் பெருமக்களுக்கு ஆலயத்தில் அருளாசிகள் வழங்கி அன்னதானமும் அருட்பிரசாதமும் கொடுத்து கௌரவித்தனர்.

What do you think?

பாண்டிச்சேரி இளைஞர்கள் இருவர் சாலை விபத்தில் பலி

நடிகர் ராம் சரண் மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளார்