in

புவனகிரியில் ஓய்வூதியர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புவனகிரி பாலக்கரை அருகாமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புவனகிரி வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 01-07-2026 முதல் அமுல்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீடு திட்ட அரசாணை 123 ல் ஓய்வூதியர்களுக்கு பாதகமாக உள்ளது எனவே அரசாணையை உடனே ரத்து செய்திட வேண்டும் என்றும்

ஓய்வூதிய சங்கங்களின் முறையீடுகளையும்,நீதி மன்ற ஆலோசனைகளையும் புறந்தள்ளி கட்டாய காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்கள் மேல் திணிப்பதை வன்மையான கண்டித்து மாதாந்திர சந்தா சிகிச்சை என்ற அரசின் நோக்கம் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளது

மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைத்து ஒய்வூதியர்களுக்கும் பணமில்லா மருத்தவத்தை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன உரை நிகழ்த்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

What do you think?

கரும்பு விலை உயர்வு கோரி விவசாயிகள் போராட்டம்

செஞ்சி வேளாண்துறை அலுவலகத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு