திருவாடானையில் அஞ்சலை அம்மாள் 136-வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில்
தென்னாட்டு ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 136-வது பிறந்தநாள் விழாவை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த விழா சிறப்புடன் நடத்தப்பட்டது.
முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு தவெக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்து மாலை அணிவித்து, மலர் தூவி தங்களின் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
